கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி மீது நடந்த பாலியல் வன்முறை சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆண் நண்பருடன் காரில் இருந்த மாணவியை மூவர் பலாத்காரம் செய்ததுடன், எதிர்த்து போராடிய அவரது நண்பர் அரிவாளால் காயமடைந்தார். குற்றவாளிகள் மூவரும் போலீசாரால் சுட்டுக்காயத்துடன் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து பெண்கள் பாதுகாப்பில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. கொங்கு ஈஸ்வரன் வழங்கிய பேச்சு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர், “இரவு 11 மணிக்கு அந்தப் பெண்ணுக்கு அங்கே என்ன வேலை இருந்தது? அதுவும் ஒரு ஆணுடன் விமான நிலைய பின்புறம் ஏன் இருந்தாள்? சமூக சீரழிவே இதற்குக் காரணம்” என கூறியுள்ளார்.
இந்தக் கருத்து, பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம்சாட்டும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பலரும் இது பெண்களின் உரிமைகளை அவமதிக்கும் கருத்து என்றும், ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி கூறக் கூடாதது என்றும் கண்டித்துள்ளனர். அரசியல் வட்டாரங்கள், மகளிர் அமைப்புகள் ஆகியவை கொங்கு ஈஸ்வரனின் பேச்சை கடுமையாக கண்டித்துள்ளன.
வியாழன், 6 நவம்பர், 2025
Home
செய்திகள்
கோவை பாலியல் வன்முறை வழக்கில் MLA கொங்கு ஈஸ்வரனின் சர்ச்சையான பேச்சு கண்டனம் கிளப்பியது
கோவை பாலியல் வன்முறை வழக்கில் MLA கொங்கு ஈஸ்வரனின் சர்ச்சையான பேச்சு கண்டனம் கிளப்பியது
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக