ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி.ஆர்.பி. ராஜா மீது புகார் அளிக்க அதிமுக புறநகர் மாவட்டத்தினர் சென்றபோது, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"அரசியலமைப்புச் சட்டத்தையும், மனித மதிப்பையும் அவமதிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரை நிர்வாண கேலிச்சித்திரத்தை டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது குற்றச்சாட்டாக மட்டுமல்லாது, அந்த தரத்தைச் சேர்ந்த அமைச்சரின் பழிவாங்கும் அரசியல் தன்மையையும் காட்டுகிறது," என்றார்.
திமுக அரசு தோல்வியடைந்த நிலையில்தான் ஆட்சி உள்ளது என்ற அவர்,
"1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் குற்றச்செயல்கள், கொலைகள், கொள்ளைகள் அதிகரித்துள்ளன. சட்ட ஒழுங்கு என்பது இந்த அரசுக்கு முக்கியமில்லை," என தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு மற்றும் பொறுப்பற்ற நிர்வாகம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
"விலைவாசி கட்டுப்பாட்டில் இல்லை. கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தங்களது நிர்வாக பிழைகளை மறைக்க திமுக, எதிர்க்கட்சித் தலைவரை கேலி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறது. இது முற்றிலும் முறையற்றது," என்றார்.
அதிமுகவின் வலிமையை வலியுறுத்திய அவர்,
"2 கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுக, தற்போது தமிழகத்தின் மிகப்பெரிய மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி இல்லையென்றால், இன்று திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்கும் நாள் நெருங்கி விட்டது. மக்கள் விருப்பம் அதற்கு வழிவகுக்கும். கூட்டணி அரசுக்கான வாய்ப்பு இல்லை, அதிமுக தனியே பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கும்," என்றார்.
வெள்ளி, 20 ஜூன், 2025
அதிமுக தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும் – முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் உறுதி
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக