அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசினால், அடுத்த நொடியே கோடிக்கணக்கில் பணம் உங்கள் பக்கம் வர துவங்கிவிடும். அந்த அதிர்ஷ்டத்தை நம் பக்கம் ஈர்த்து தரக்கூடிய “கிரீன் தாரா” மந்திரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நம்முடைய ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மகாலட்சுமி எப்படி பணம் சார்ந்த கடவுளோ, அதே போல புத்த மதத்தில், இந்த “கிரீன் தாரா” அவர்கள் பணத்தை தரக்கூடிய கடவுளாக வழிபாடு செய்யப்படுகிறார்கள். கிரீன் தாரா ஒரு அதிஷ்ட தேவதை இவளை கூப்பிட்டால் அதிர்ஷ்டம் நம் பக்கம் அதிவேகமாக வர துவங்கும். இந்த பச்சை நிற தாராவை வணங்கி நம்முடைய தேவைக்கும், நமக்கான பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஒரு மந்திர வரியும் இருக்கிறது. இதோடு சொல்ல வேண்டிய ஒரு அதிர்ஷ்ட நம்பரும் இருக்கிறது. இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பின் சொல்லக்கூடிய மெத்தடை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய பணக்கஷ்டம் விரைவாக தீர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை. நம்முடைய மகாலட்சுமியை வேண்டிக்கொண்டு இந்த பதிவிற்குள் பயணம் செய்வோம். பணம் தரும் கிரீன் தாரா மந்திரம் எல்லா வேலையும் முடித்துவிட்டு முகம் கை கால்களை கழுவி விட்டு, வெள்ளிக்கிழமை இரவு உறங்க செல்லும்போது, படுக்கையில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொன்னாலும் சரி, அல்லது வரவேற்பறையில் வேறு ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி விட்டு, தூங்கினாலும் சரி, அது உங்களுடைய சௌகரியம். முதலில் உங்களுடைய சுண்டு விரலை மட்டும் தனியாக நீட்டிக் கொள்ளுங்கள். மற்ற நான்கு விரல்களையும் மடக்கிக் கொள்ளுங்கள்.“1403” இந்த நம்பரை சுண்டு விரலால் உங்கள் முன்பு ஒரு பலகை இருப்பதாக நினைத்துக் கொண்டு, காற்றிலேயே இந்த நம்பரை எழுதி விட்டு, பின் சொல்லக்கூடிய இந்த தாராதேவி மந்திரத்தை 27 முறை படித்துவிட்டு, உங்களுடைய பணத் தேவைகளை சொல்லி, பிரார்த்தனை செய்துவிட்டு நீங்கள் தூங்கி விடலாம். இந்த வெள்ளிக்கிழமை மட்டும் அல்ல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கலாம். இன்று வெள்ளிக்கிழமை. இன்று இரவு இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கட்டாயம் என்னுடைய பணக்கஷ்டம் தீர்ந்துவிடும். என்னுடைய தேவைக்கு பணம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு தூங்குகிறீர்கள். மறுநாள் காலை கண்விழித்து, உங்கள் வேலையை துவங்குகிறீர்கள். பணம் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு பாசிடிவ் செய்தி உங்கள் காதில் விழுகிறது என்றால், இந்த மந்திரம் உங்களுக்கு சித்தியாகி விட்டது என்றுதான் அர்த்தம். பின்பு தொடர்ந்து இந்த மந்திரத்தை நீங்கள் வெள்ளிக்கிழமை தோறும் உச்சரிக்க, தாராதேவி உங்களுக்கு தாறுமாறாக பணவரவை கொடுத்து விடுவாள். கிரீன் தாரா மந்திரம் ஓம் தாரே துத் தாரே, தூரே சோஹா
வெள்ளி, 20 ஜூன், 2025
"வெள்ளிக்கிழமை கிரீன் தாரா : பூஜை பணம் வரத்து தரும் ஆன்மீக மந்திரம்"
Tags
# ஆன்மீக தகவல்கள்
About bmstelevision
ஆன்மீக தகவல்கள்
லேபிள்கள்:
ஆன்மீக தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக