மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மயிலாடுதுறை கலால் உதவி ஆணையர் மாணிக்கராஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பை உறுதிப்படுத்தும் உறுதிமொழி ஏற்படுத்தினார். மேலும், மாணவர்களுக்கு போதைப்பொருள் தீமைகளை விளக்கும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பின்னர், சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் “போதைப் பொருட்கள் உடல்நலத்தை பாதிக்கும்”, “நினைவாற்றல் குறையும்”, “வாழ்க்கை நாசமாகும்”, “சாலை விபத்துகளுக்கு வழிவகுக்கும்” போன்ற வாசகங்கள் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பெஸ்ட் மெட்ரிக் பள்ளி குழும தலைவர் ராஜ்கமல், வட்டாட்சியர் அருள்ஜோதி, கலால் துறை வட்டாட்சியர் விஜயராணி, மதுவிலக்கு காவல் ஆய்வாளர் விஜயா, சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ், பள்ளி முதல்வர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
வியாழன், 6 நவம்பர், 2025
சீர்காழியில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் விழிப்புணர்வு பேரணி
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக