2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற கோஷத்துடன் தங்களது பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் இருந்து, கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தொகுதியிலும் உள்ள செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, வெற்றி வாய்ப்பு, கூட்டணி நிலை, மற்றும் உள்ளக ஒற்றுமை குறித்து ஆலோசித்து வருகிறார்.
இன்று சங்கரன்கோவில் மற்றும் திருநெல்வேலி தொகுதி நிர்வாகிகள் உடன் சந்திப்பு நடைபெற்றது. இதில், 2026 தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டியது அவசியம் என வலியுறுத்திய ஸ்டாலின், தோல்வி ஏற்பட்டால் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் பதவிகளும் நீக்கப்படும் என எச்சரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திருநெல்வேலியில் நிர்வாகிகள் ஒற்றுமையுடன், கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு தொகுதியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்ய ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
வியாழன், 6 நவம்பர், 2025
Home
செய்திகள்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவில் தேர்தல் பணிகள் தீவிரம் – நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவில் தேர்தல் பணிகள் தீவிரம் – நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக