தமிழ்நாடு மற்றும் வாரணாசி இடையிலான கலாச்சார உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசின் கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் நடத்தும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, இவ்வாண்டு டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்குகிறது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி, இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும் உத்தரப்பிரதேச அரசும் இணைந்து நடத்தும் முக்கியமான கலாச்சார விழாவாகும். 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தமிழர் பண்பாடு, மரபு, இலக்கியம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தையும் காசியின் புனித பண்பாட்டையும் இணைக்கும் ஒரு முக்கியமான தளமாக விளங்குகிறது.
மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்: “இந்த ஆண்டு நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து சுமார் 1,400 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு காசிக்கு அழைத்து செல்லப்படுவர். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுனர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஆன்மீக அறிஞர்கள் உட்பட பல தரப்பினர் பங்கேற்பார்கள்,” எனக் கூறினார்.
மேலும், காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க விரும்புவோர் kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வியாழன், 6 நவம்பர், 2025
Home
செய்திகள்
டிசம்பர் 2-ஆம் தேதி காசி தமிழ் சங்கமம் தொடக்கம் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
டிசம்பர் 2-ஆம் தேதி காசி தமிழ் சங்கமம் தொடக்கம் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக