சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தமிழக அரசு அறிவித்துள்ள உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்தத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, இன்னும் வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் மாதாந்திர உதவித்தொகை பெறலாம். இதில் 9-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு ரூ.200, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படும். இந்தத் தொகை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
வேலைவாய்ப்புத் துறையில் 5 ஆண்டுகள் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்திருக்கும் 40 வயதிற்குள் (அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்) உள்ளவர்கள் இதற்கு தகுதியானவர்கள். ஆண்டு வருமானம் ரூ.72,000-ஐ தாண்டக்கூடாது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லாமல் 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தால் ரூ.600, மேனிலைப் படிப்புடன் ரூ.750, பட்டதாரிகள் ரூ.1000 பெறலாம்.
தகுதியுடைய இளைஞர்கள் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
வியாழன், 6 நவம்பர், 2025
Home
செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை – மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை – மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தகவல்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக