பழிவாங்கும் எண்ணம் அரசுக்கு இருந்திருந்தால் விஜய்யை கைது செய்திருப்பார் – சபாநாயகர் அப்பாவு - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

பழிவாங்கும் எண்ணம் அரசுக்கு இருந்திருந்தால் விஜய்யை கைது செய்திருப்பார் – சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, கரூர் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: “கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் தாமே சிறுமைப்பட்டு போவார்கள். பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்திருந்தால், நடிகர் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். ஆனால் முதலமைச்சர் அப்படி செய்யவில்லை.
கரூரில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தபோது, சிலர் அரசை குறை கூறி அரசியல் பலன் அடைய முயன்றனர். ஆனால் எந்த தலைவரும் தன் தொண்டர்கள் உயிரிழக்க வேண்டும் என விரும்ப மாட்டார். முதலமைச்சர் அதேபோல் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். அந்த பெருந்தன்மை மற்றும் மனிதநேய மனப்பான்மையை சாதாரண மக்கள் பாராட்டி வருகின்றனர்” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad