தஞ்சாவூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை மானஸா டான்ஸ் அகாடமி சார்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மானஸா டான்ஸ் அகாடமி நிறுவனர் தனலட்சுமி இரமேஷ் தலைமையேற்றார்.
இந்நிகழ்ச்சியில் நடன இயக்குனர் மாஸ்டர் ஜானி, விஜய் டிவி புகழ் பழனி, ராபா மீடியா நிறுவனர் பிரசன்ன ராமானுஜம், புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னரின் ஏ.டி.சி. முத்துக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாநகர மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பாரத் கல்லூரி தலைவர் புனிதா கணேசன், ஷட்டில் யுனிவர்சிட்டி வீரர் பாலாஜி அருணாச்சலம், டாக்டர் உஷா நந்தினி மணிராம், ஜி.என்.டி. பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 300க்கும் மேற்பட்டோர் இதய வடிவில் நின்று உலக சாதனை படைத்தனர்.
மேலும், குழந்தைகள் தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம், கரகாட்டம், யோகா, ஆடல்–பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவர்களின் மாணவர்கள் உடல் உறுப்பு தானத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் விதமாக சிறப்பு சாகச நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
திங்கள், 10 நவம்பர், 2025
தஞ்சை மானஸா அகாடமி சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வில் உலக சாதனை
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக