சேலம் மாவட்டம் அம்மாபேட்டை செங்குந்தர் அருள்மிகு குமரகுரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளையின் 12-ஆம் ஆண்டு அறுபத்து மூவர் திருவீதி உலா மிகுந்த ஆன்மிக சிறப்புடன் நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு, ஆலய உற்சவ மண்டபத்தில்
அருள்மிகு பொல்லாப் பிள்ளையார், உமை முருக இறைவர், அறுபத்து மூவர், தொகையடியார், இன்பமணிவாசகர், தெய்வச்சேக்கிழார் பெருமான் ஆகியோருக்கு பெருந்திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர், மாலை நேரத்தில் திருக்கோவில் மாடவீதிகளில் வழியாக,
எல்லாம் வல்ல அருள்மிகு பொல்லாப் பிள்ளையார், அறவிடையில் எழுந்தருளும் உமை முருக இறைவர், அறுபத்து மூவர், தொகையடியார், இன்பமணிவாசகர், தெய்வச்சேக்கிழார் ஆகியோர் சிறப்பு அலங்காரத்துடன் திருக்கயிலாய சிவகானப்பேரிகை முழங்க, அடியார் பெருமக்கள் புடைசூழ திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது.
பக்தர்கள் பெருமளவில் தரிசனம் செய்து ஆனந்தம் அடைந்தனர்.
இவ்விழா ஏற்பாடுகளை பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளை
தலைவர் சிவ. சிங்காரவேல், செயளாலர் பிரகாசம், அருள் பிரகாசம், கோபி, பொருளாளர் சிவாஜி, துணைத் தலைவர்கள் ரவி, சுந்தரவேல்,
ஆலோசகர்கள் ஆடிட்டர் கிருஷ்ணன், எம். தியாகராஜன்,
கோவில் தலைவர் எம்.கே. அரிபுத்திரன், நிர்வாக அதிகாரி விமலா,
வாசு, கௌதம், தங்கராசு, நடராஜ், ஞானசேகரன், எம்.கே. சண்முகம்,
மற்றும் முன்னாள் அறங்காவலர் செந்தில் நாதன், ஜோதி சண்முகமணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
விழா நிறைவாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திங்கள், 10 நவம்பர், 2025
Home
ஆன்மிக தகவல்கள்
ேலம் அம்மாபேட்டையில் பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளையின் 12-ஆம் ஆண்டு அறுபத்து மூவர் திருவீதி உலா – பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பு!
ேலம் அம்மாபேட்டையில் பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளையின் 12-ஆம் ஆண்டு அறுபத்து மூவர் திருவீதி உலா – பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பு!
Tags
# ஆன்மிக தகவல்கள்
About bmstelevision
ஆன்மிக தகவல்கள்
லேபிள்கள்:
ஆன்மிக தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக