மயிலாடுதுறை செம்பனார்கோயில் தாமரைப் பள்ளியில் ‘புஸ்தகாலயா’ மாணவர் நூலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

திங்கள், 10 நவம்பர், 2025

மயிலாடுதுறை செம்பனார்கோயில் தாமரைப் பள்ளியில் ‘புஸ்தகாலயா’ மாணவர் நூலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் உள்ள தாமரைப் பள்ளியில், மாணவர்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ‘புஸ்தகாலயா’ என்ற மாணவர்களின் நூலகம் இன்று (10.11.2025) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக இயக்குநர் குடியரசு தலைமையேற்றார். கடந்த 2024–2025 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவியின் பெற்றோர் ராஜேஷ் மற்றும் சத்யா ஆகியோர் நூலகத்தை திறந்து வைத்து சிறப்பித்தனர். மாணவர்கள் கைபேசி மற்றும் பிற பொழுதுபோக்குகளில் நேரத்தை வீணாக்காமல், புத்தக வாசிப்பில் ஈடுபட வேண்டும் என்பதையும், வாசிப்பது மன அமைதி மற்றும் அறிவு வளர்ச்சிக்குத் துணைபுரியும் என்பதையும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புத்தகம் வாசிப்பதை வாழ்க்கை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்ற உறுதிமொழியையும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் கார்த்திக் ராஜ், துணை முதல்வர் மங்கையர்கரசி, பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவாக துணை முதல்வர் மங்கையர்கரசி நன்றியுரை வழங்கி விழாவை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad