திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக கூட்டுறவு பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாநில செயலாளர் இந்தியன் துரைவேல் வரவேற்புரை ஆற்றினார். மாநில இணை அமைப்பாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் சிவ செந்தமிழ் அரசு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தெற்கு மாவட்ட தலைவர் கே. ரமேஷ் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் கவிதா வெங்கடேசன் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு பிரிவு மாநில இணை அமைப்பாளர் டி. எஸ். ஷங்கர், கூட்டுறவு துறையின் வளர்ச்சி வாய்ப்புகள், எதிர்கால பணிகள் மற்றும் சட்ட உதவி நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார்.
கூட்டத்தின் இறுதியில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மாநிலத்தில் கூட்டுறவு பிரிவை முதன்மை பிரிவாக உயர்த்துதல், மாவட்ட அளவில் அலுவலகங்களைத் தொடங்குதல், மத்திய கூட்டுறவு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்தல், ஏ-கிளாஸ் உறுப்பினர்களை அதிகரித்தல், ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 பொறுப்பாளர்களை நியமித்தல் உள்ளிட்டவை அடங்கும். மேலும், ரேஷன் கடைகளில் “கரி கல்யாணத் திட்டம்” கீழ் பிரதமர் புகைப்படத்துடன் அறிவிப்பு பலகைகள் அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் கே. ரமேஷ் அவர்களின் தந்தையார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், பாஜக கூட்டுறவு பிரிவை மாநில அளவில் வலுப்படுத்தும் உறுதியுடன் நிர்வாகிகள் செயல்பட தீர்மானித்தனர்.
திங்கள், 10 நவம்பர், 2025
Home
செய்திகள்
திருவண்ணாமலையில் பாஜக கூட்டுறவு பிரிவு ஆலோசனைக் கூட்டம் – பல தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருவண்ணாமலையில் பாஜக கூட்டுறவு பிரிவு ஆலோசனைக் கூட்டம் – பல தீர்மானங்கள் நிறைவேற்றம்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக