திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பனை விதை நடவு விழிப்புணர்வு - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

திங்கள், 10 நவம்பர், 2025

திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பனை விதை நடவு விழிப்புணர்வு

திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்காக பிளாஸ்டிக் “பை” ஒழிப்பு மற்றும் பனை விதை நடவு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெயரட்சக ராஜராஜன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் மருதைகலாம் முன்னிலை வகித்தார். தொழிற்பயிற்சி பயிற்றுனர் ஜாம்சன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஆத்தூர் கூட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அலுவலர் டாக்டர் பிரஸ். இரா. கணேசன், திண்டுக்கல் மாவட்ட பசுமை தோழி லேகாவர்ஷினி, தமிழ்நாடு காந்தி மன்ற தலைவர் ஜெயசீலன், ஆலோசகர் முனைவர் முருகானந்தம், ஜி.டி.என் கல்லூரி பேராசிரியர் லயன் ரவிச்சந்திரன், திட்ட மேலாளர் அன்பு இன்னாசி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் மற்றும் பனை மரங்களின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயரட்சக ராஜராஜனுக்கு “சிறந்த தொழிற்பயிற்சி முதல்வர்” என்ற பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பசுமை எப்.எம் தொகுப்பாளர் காதர் பாட்சா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad