திண்டுக்கலில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் சார்பில் காவல் கண்காணிப்பாளரிடம் மனு - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

திங்கள், 10 நவம்பர், 2025

திண்டுக்கலில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் சார்பில் காவல் கண்காணிப்பாளரிடம் மனு

திண்டுக்கல் மாவட்டம் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில், மாவட்ட தலைவர் ஏ.பி.எஸ். நாகராஜ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில தலைவர் இளமுருகு முத்துவின் பெயரையும், இயக்கத்தின் மரியாதையையும் களங்கப்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரைச் சேர்ந்த பொன். சத்யசேகர் எனும் நபர் அவதூறு பரப்பி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் அரசு கலைக்கல்லூரி நிலம் தொடர்பான பொய்யான தகவல்களை பரப்பி, இயக்க நிர்வாகிகளை எதிர்த்து தகாத வார்த்தைகளில் பேசி, உயிர் மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் இயக்கத்திற்கும் சமூக அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு அளிக்கும் நிகழ்வில், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் ராமசாமி, மாவட்ட ஆலோசகர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad