ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், தமிழகத்தில் மக்களின் தேவைக்காக மணல் குவாரிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுவை கார் ஏ. ஜெயக்குமார் தலைமையில் சமர்ப்பித்தனர்.
மனுவில், தமிழக அரசு நீர்வள ஆதார துறையின் மூலம் ஒன்பது இடங்களில் அரசு மணல் குவாரிகளை தொடங்கும் நடவடிக்கையை வரவேற்கிறோம் என்றும், இது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அரசு “கலைஞர் கனவு இல்லத் திட்டம்” எம்-சாண்ட் மூலம் கட்டப்படுவதால் கட்டிடத் தரம் குறைந்துள்ளதாகவும், எம்-சாண்ட் தயாரிப்பில் அதிக தண்ணீர், எரிபொருள், மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 20 மாதங்களாக மணல் குவாரிகள் செயல்படாததால், மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் லாரி உரிமையாளர்கள், ஒரு லட்சம் தொழிலாளர்கள், மேலும் மறைமுகமாக 10 லட்சம் பேர் வாழ்வாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இயற்கை ஆர்வலர்கள் சிலர் தவறான தகவல்களை பரப்புவதாகவும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
திங்கள், 10 நவம்பர், 2025
ராணிப்பேட்டையில் மணல் குவாரி மீண்டும் திறக்க மனு
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக