கோயம்புத்தூரில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

திங்கள், 10 நவம்பர், 2025

கோயம்புத்தூரில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கோயம்புத்தூரில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு கோயம்புத்தூர் சிங்காநல்லூர் E1 காவல் நிலையத்திற்குட்பட்ட புதிய புறக்காவல் நிலையம் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாநகர மேயர் மாண்புமிகு திருமதி கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு. மா. சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தனர்.
புதிய புறக்காவல் நிலையத்தை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி. பி. ராஜ்குமார் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் திரு. ரா. வெற்றிசெல்வன், கிழக்கு மண்டல தலைவர் திருமதி இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் திரு. ராம்குமார், செயற்பொறியாளர் திரு. கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர் திரு. மோகன், உதவி பொறியாளர் திரு. ஃபர்மான் அலி, சுகாதார ஆய்வாளர் திரு. ஜெரால்டு சத்யபுனிதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டதன் மூலம் சிங்காநல்லூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் காவல் பணிகள் மேலும் வலுவாகும் என்றும், மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமை சிறப்பாக பேணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad