இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணி கட்சியினர் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தேனி பழைய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த தேனி மாவட்ட திமுக சார்பில் பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேனி மக்களவை உறுப்பினரும் திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வன் எம்.பி தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கம்பம் எம்.எல்.ஏ. இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மநீம ஆகிய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும், இதன் மூலம் அரசியல் நோக்கம் நிறைவேற்ற முயற்சிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி, மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. சுமார் 300க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சியினர் இதில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திங்கள், 10 நவம்பர், 2025
Home
செய்திகள்
தேனியில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனியில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக