சேலம் வீரபாண்டி ஒன்றியத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

செவ்வாய், 11 நவம்பர், 2025

சேலம் வீரபாண்டி ஒன்றியத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம், அக்கரபாளையம் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” குறை தீர்க்கும் முகாம் அரியானூர் விக்னேஷ்வரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் திமுக வீரபாண்டி ஒன்றியச் செயலாளர் மற்றும் அட்மா குழுத் தலைவர் வெண்ணிலா சேகர், தாசில்தார் ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், ஒன்றிய அவை தலைவர் முருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமைத் தொடங்கி வைத்தனர். மேலும் ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் கிருத்திக்ராஜா, வீரபாண்டி வெங்கடாசலம், முன்னாள் தலைவர் அருள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் குறைகள், கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad