எஸ்.ஐ.ஆர் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க பாஜக அரசு முயற்சி – கனிமொழி எம்பி கண்டனம் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

செவ்வாய், 11 நவம்பர், 2025

எஸ்.ஐ.ஆர் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க பாஜக அரசு முயற்சி – கனிமொழி எம்பி கண்டனம்

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையை கைவிட கோரி, திமுக கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தென் மண்டல தேர்தல் பொறுப்பாளர் கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் கனிமொழி எம்பி, “வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதனை பாஜக அரசு எஸ்.ஐ.ஆர். மூலம் பறிக்க முயற்சிக்கிறது. பிகாரில் இஸ்லாமியர், தலித், பெண்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதால் அவர்களின் உரிமைகளையும் தொகுதிகளையும் பறிக்க திட்டமிட்டுள்ளது. அதிமுக பாஜகவின் அடிமையாக செயல்படுகிறது,” எனக் கண்டனம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வி. சண்முகம், மதிமுக செயலாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மெபூப், எம்எல்ஏக்கள் ஜி.வி. மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad