சென்னை தண்டையார்பேட்டையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

திங்கள், 10 நவம்பர், 2025

சென்னை தண்டையார்பேட்டையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

சென்னை தண்டையார்பேட்டையில் பாரத மக்கள் சேவா மற்றும் வசந்தி மக்கள் சிகிச்சையகம் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. டாக்டர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், வசந்தி மெடிக்கல் சார்பில் வைரகுமார், அல்ட்ரா ரத்த பரிசோதனை நிலையம் சார்பில் செந்தில்குமார், பாரத மக்கள் சேவா சார்பில் டாக்டர் மணிகண்டன், பாஸ்கர், மாரிமுத்து, செல்வகுமார் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.
முகாமில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், பொதுமருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad