ராணிப்பேட்டை முத்து கடையில் ஜாக்டோ ஜியோ ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பாலமுருகன்.தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பள்ளி பட்டதாரி சங்கம் மாநில துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாவட்டத் தலைவர் நரசிம்மன், எழில் இளம் வழுதி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில துணைத் தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டத் தலைவர் தமிழ்நாடு உயர்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் , மாவட்ட செயலாளர் பர்சீலா வான சாஸ்திரி, மாவட்டச் செயலாளர் யோசுவா, மாவட்ட செயலாளர் தேவராஜ், மாவட்டத் தலைவர் விநாயகம், மாவட்ட தலைவர் குமரவேல், மாவட்டச் செயலாளர் சரவணன்,மாவட்டத் தலைவர் சதீஷ்குமார், மாவட்டத் தலைவர் சையத் சிராஜுதீன், மண்டல இணைச் செயலாளர் கவிதா ஆகியோர் துவக்க உரையாற்றினர்.இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியவர் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு தொடக்கநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார்.இதில் கோரிக்கை விளக்க உரை ஆற்றியவர்கள்.அரசுப் பணியில் சேர்ந்தவருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே அமுல் படுத்த வேண்டும்.இளநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உடல் கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி கலையப்பட வேண்டும்.தொடக்கக் கல்வித் துறையில் பணி புரியும் தொண்ணூறு சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பு வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அரசு ஆணை என் 243 மற்றும் ஆதி திராவிட பழங்குடியினர் நலத் துறையில் அரசாணை 75 நாள் ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்துள்ள வேண்டும்.மேலும் 10 அம்ச கோரிக்கைகளை வலுவிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் இதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
செவ்வாய், 18 நவம்பர், 2025
Home
செய்திகள்
ராணிப்பேட்டை முத்து கடையில் ஜாக்டோ ஜியோ ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராணிப்பேட்டை முத்து கடையில் ஜாக்டோ ஜியோ ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக