திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சி. சிவா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் நடைபெற வேண்டிய நேரம் காலை 10.30 மணியாக இருந்தபோதிலும், அதே நேரத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக துறை சார்ந்த பல அதிகாரிகள் கூட்டத்தில் நேரம் தவறி வருவதால் தொடக்கம் தாமதமானது.
ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு மட்டுமே சில துறை அதிகாரிகள் இடத்துக்கு வந்து கூட்டத்தில் பங்கேற்றனர். விவசாயிகள் நீண்டநாட்களாக முன்வைத்து வரும் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு தீர்வு காண வேண்டிய இந்தக் கூட்டத்தில், முழுமையான அதிகாரிகள் குழுவின் பங்கேற்பு இல்லாதது விவசாயிகளில் சில அதிருப்தியை ஏற்படுத்தியது.
போளூர், ஆரணி, ஜமுனாமத்தூர், சேத்பட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளை முன்வைத்தனர். நீர்பாசன சிக்கல்கள், உர மற்றும் விதை விநியோக தாமதம், பயிர் சேத ஈடு, மின்சார இணைப்பு பிரச்சினைகள் போன்றவை விவசாயிகள் முக்கியமாக எடுத்துரைத்த கேள்விகள் ஆவாகும்.
கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தேவையான அறிக்கைகள் அனுப்பப்படும் என்றும் உறுதியளித்தனர்.
செவ்வாய், 18 நவம்பர், 2025
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக