திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கான உதவி மையங்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைப்பு - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

திங்கள், 17 நவம்பர், 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கான உதவி மையங்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைப்பு

திருநெல்வேலி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வாக்காளர்கள் முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க, திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா. சுகுமார் தெரிவித்துள்ளார். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் 01.01.2026-ஐ தகுதி நாளாக அறிவித்து, அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மாவட்டம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியின் இரண்டாவது கட்டமாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு இரட்டைப் பிரதிகளில் வழங்கி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள 1,490 BLOக்கள், மொத்த 13,42,113 வாக்காளர்களில் 94.63% வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வழங்கி முடித்துள்ளனர். வாக்காளர்கள் பூர்த்தி செய்த படிவங்கள் BLO மொபைல் செயலியில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் படிவங்கள் பூர்த்தி செய்வது குறித்து மேலதிக தகவல்களுக்கு தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலக உதவி மையங்களை அணுகலாம். மேலும், மாவட்ட அளவில் 0462-2501181 மற்றும் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய தொகுதிகளுக்கான உதவி எண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad