தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பிரசித்திபெற்ற கள்ளர் வெட்டு திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. தென்மாவட்டத்தில் புகழ் பெற்ற உடன்குடி பஞ்சாயத்து யூனியன் குதிரைமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவை நோக்கி பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை 10 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கப்பட்டது. தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, வில்லிசை இசை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.டிசம்பர் 14 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஐவராஜா மற்றும் மாலையம்மன் பூஜை, பின்னர் மதியம் 12 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையும் நடைபெறும். டிசம்பர் 15 ஆம் தேதி மகளிர் வண்ணக் கோலமிடும் நிகழ்ச்சியுடன் தொடங்கி, முழு நாளும் பல்வேறு அபிஷேகங்கள், மாவிளக்கு பூஜை, புஷ்பாஞ்சலி மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெறும். இரவு 9 மணிக்கு உற்சவர் திருவீதியில் உலாவார்.வருகிற 16 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு அபிஷேக பால் குடங்கள் ஊர்வலம், பேச்சியம்மன் உற்சவர் ஊஞ்சல் சேவை, பின்னர் தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைக்குப் பிறகு மாலை 4.45 மணிக்கு கோவிலின் பின்புற செம்மணல் தேரியில் பிரசித்திபெற்ற கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும்.விழா ஏற்பாடுகளை அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் கோவில் அறங்காவலர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
திங்கள், 17 நவம்பர், 2025
Home
செய்திகள்
தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடக்கம்
தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடக்கம்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக