தேனி: தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. காலை தொடக்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், பின்னர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.
இவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில், அரசு ஊழியர்கள் நீண்ட நாளாக வலியுறுத்தி வரும் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசின் பல்வேறு துறைகளில் தற்போது 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் ஆகியவை முக்கியமானவை. மேலும், சாலைத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்துதல், ஆசிரியர்கள் மற்றும் அரசுத் துறை ஊழியர்களின் நலன்களை உயர்த்தும் பிற கோரிக்கைகளும் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கோஷங்கள் எழுப்பிய அவர்கள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
திங்கள், 17 நவம்பர், 2025
Home
செய்திகள்
தேனியில் ஜாக்டோ–ஜியோ ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்: பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
தேனியில் ஜாக்டோ–ஜியோ ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்: பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக