திருச்சி, 18.11.2025, செவ்வாய்க்கிழமை — திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் எனப் போற்றப்படும் ஐயா வ.உ.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கோர்ட் அருகில் உள்ள வ.உ.சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு இன்று மாவட்ட செயலாளர் மற்றும் மாநில அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் நகர செயலாளர் மற்றும் மண்டலக் குழுத் தலைவர் மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சபியுல்லா, மாவட்டக் கழக நிர்வாகி குணசேகரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, பகுதி கழக செயலாளர் நீலமேகம் தர்மராஜ், மோகன், ராஜ்முஹம்மத், மணிவேல், விஜயகுமார், பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் மாநில, மாவட்ட, மாநகர், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர், வட்ட அளவிலான கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
செவ்வாய், 18 நவம்பர், 2025
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வ.உ.சி. அவர்களின் நினைவு நாள் மரியாதை
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக