பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 6) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிட, அவர்களின் எதிர்காலத்தை 3.75 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். இதில் 10.72 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் ஆவர். மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
குர்ஹானி, முஸாஃபர்பூர் தொகுதிகளில் தலா 20 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், அலௌலி, பர்பட்டா தொகுதிகளில் தலா 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 5 கட்சிகள்) மற்றும் எதிர்க்கட்சியான இண்டி கூட்டணி (ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள்) இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
முக்கிய வேட்பாளர்களில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் மற்றும் ஜன் சுராஜ் கட்சியின் சஞ்சல் சிங் போட்டியிடுகின்றனர்.
அதேபோல், தேஜ் பிரதாப் யாதவ், துணை முதல்வர்கள் சாம்ராட் சௌதரி, விஜய் குமார் சின்ஹா, மற்றும் நிதீஷ் குமாரின் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய அரசியல்வாதிகள் களமிறங்கியுள்ளனர்.
இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும்.
இந்நிலையில், பீகார் தேர்தலை 7 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பார்வையாளர்கள் குழு (பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, கொலம்பியா) பார்வையிட உள்ளனர்.
வியாழன், 6 நவம்பர், 2025
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடக்கம்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக