மயிலாடுதுறையில் மயானத்திற்குச் செல்ல வழியில்லா அவலம் — முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்களின் வேதனை - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

மயிலாடுதுறையில் மயானத்திற்குச் செல்ல வழியில்லா அவலம் — முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்களின் வேதனை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடரங்கம் ஊராட்சியில் உள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராமம், பல ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவித்து வருகிறது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள், தங்கள் இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்குக் கொண்டு செல்ல, சுமார் 300 மீட்டர் தூரம் தனியார் நபர்களின் வயல்வெளிகளையே நம்பி செல்ல வேண்டிய அவலத்தில் உள்ளனர்.
வயல்களில் நெல் அல்லது பிற பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தாலும், கனமழையால் வெள்ளம் சூழ்ந்திருந்தாலும் கூட, கிராம மக்கள் தங்கள் உறவினர்களின் உடலை சுமந்து வயல்வழியாகத்தான் மயானத்தை அடைகின்றனர். இதனால், ஒவ்வொரு இறப்பும் இக்கிராமத்தில் ஒரு மரணப் போராட்டமாக மாறி வருகிறது. பல ஆண்டுகளாக ஊராட்சி மன்றத்திற்கும், அரசு அதிகாரிகளுக்கும் மனுக்கள் அளித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல்வாதிகள் “வெற்றி பெற்றால் மயானத்திற்கு வழி அமைப்போம்” என உறுதி அளித்தும், பின்னர் அதை மறந்துவிடுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண, பாஜக மாவட்டத் தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளனர். “உடனடியாக மயானத்திற்குச் செல்ல நிரந்தர வழி அமைக்கப்படாவிட்டால், பாஜக சார்பில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என அவர் எச்சரித்துள்ளார். முத்துகிருஷ்ணாபுரம் மக்களின் மனிதாபிமான கோரிக்கைக்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad