கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்முறையை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் உமாரதி ராஜன், “பெண்களை இழிவாக பேசிய பொன்முடிக்கு திமுக மீண்டும் கட்சியில் பதவி வழங்கியுள்ளது. இது திமுக அரசின் பெண்கள் மீதான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு மாற்றி வருகிறது,” என்று கடுமையாக குற்றம்சாட்டினார்.
அவர் மேலும், “கோவையில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் தமிழக மக்களின் மனதை உலுக்கியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனவும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கோபகுமார், மாவட்ட பொருளாளர் டாக்டர் முத்துராமன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் சந்திரசேகர், மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வியாழன், 6 நவம்பர், 2025
Home
செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றி வருவதாக பாஜக குற்றச்சாட்டு
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றி வருவதாக பாஜக குற்றச்சாட்டு
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக