காஞ்சிபுரம் தாமரை நர்சரி பள்ளியில் “பட்ஸ் ஆஃப் பிளாசம் - 2025” கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

காஞ்சிபுரம் தாமரை நர்சரி பள்ளியில் “பட்ஸ் ஆஃப் பிளாசம் - 2025” கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே, குமார் தெருவில் இயங்கி வரும் தாமரை நர்சரி & பிரைமரி பள்ளியில் 33வது ஆண்டு “பட்ஸ் ஆஃப் பிளாசம் - 2025” கண்காட்சி இன்று (நவம்பர் 6) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் கைவண்ணத்தில் உருவான இக்கண்காட்சியில், விவசாயம், விஞ்ஞானம், கட்டிடக்கலை, வனவிலங்குகள், சூரிய குடும்பம், மனித உடல் உறுப்புகள், மழைநீர் சேமிப்பு, பண்டைய அரசவை, மத அடையாளக் கட்டிடங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் அட்டைகள் மற்றும் மறுசுழற்சி பொருட்களைக் கொண்டு சிறந்த மாதிரி வடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலையும், அறிவியலறிவையும் இணைத்து உருவாக்கிய இக்காட்சிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. பள்ளி வளாகம் உற்சாகமாக ஒளிர்ந்தது. தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உஷா ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்து, மாணவர்களின் புதுமையான முயற்சிகளை பாராட்டினார். பள்ளி நிர்வாகம் மாணவர்களின் கல்வி மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிக்கொணரும் விதமாக இத்தகைய நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதாக தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad