காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக–அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக–அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்

காஞ்சிபுரம் மாநகராட்சியின் அண்ணா அரங்கத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர மாமன்ற கூட்டம், ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பரபரப்பாக மாறியது. கூட்டத்தின் போது, குப்பைகள் அள்ளப்படாதது மற்றும் அடிப்படை வசதி பிரச்சனைகள் குறித்து அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, அதிமுக கவுன்சிலர் சண்முகநாதன், தனது வார்டில் குப்பைகள் தேங்கி கிடப்பது மற்றும் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து ஆவேசமாக பேசியது, திமுக கவுன்சிலர்களின் எதிர்வினையால் வாக்குவாதமாக மாறியது.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி கூச்சலிட்டதால், கூட்டம் சில நேரம் ஸ்தம்பித்தது. பின்னர் மாநகராட்சி ஆணையர், புதிய குப்பை வண்டிகள் வாங்கப்பட உள்ளதாகவும், அவை வந்தவுடன் குப்பை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலாக, “எப்போது நடவடிக்கை?” என மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பிய கவுன்சிலர்களிடம், அவர் “இது ஒரு Quiz நிகழ்ச்சி அல்ல” எனக் கூறிய பதில் கூட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், மேயர் மகாலட்சுமி யுவராஜ் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் பேச்சை புறக்கணித்து, பென்சிலை ஆட்டி விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து, “மக்களின் பிரச்சனைகளில் அக்கறையற்ற அணுகுமுறை” என குற்றம்சாட்டினர். மக்கள் நலப் பணிகள் குறித்த பயனுள்ள விவாதம் நடைபெற வேண்டிய மாமன்ற கூட்டம், அரசியல் மோதலும் அதிகாரிகளின் அலட்சியமும் காரணமாக பரபரப்புடன் முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad