தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

புதன், 12 நவம்பர், 2025

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

பழமையான சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில், ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த நவம்பர் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவின் ஒன்பதாவது நாளான இன்று (நவம்பர் 13) முக்கிய நிகழ்ச்சியாக உலகம்மன் திருத்தேரில் எழுந்தருளி, மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேர் இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து பங்கேற்றனர். பக்தர்களின் “ஹரஹர மஹாதேவா” முழக்கத்தால் தென்காசி நகரம் முழுவதும் ஆன்மிகத் திருவிழா சூழல் நிலவியது. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாளின் திருக்கல்யாணம் வரும் நவம்பர் 15ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தினரால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad