பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வந்த பொதுமக்களுக்கு, ஒருமுறை வரன்முறை திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் பணிகள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 180 பயனாளிகளுக்கு ரூ.11.47 கோடி மதிப்பிலான பட்டாக்களை இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், சார் ஆட்சியர் ஆஷிக் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
36 ஆண்டுகளாக பட்டா பெற முடியாமல் பலமுறை மனு அளித்தும் பயனின்றி காத்திருந்த பொதுமக்களுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவின் பேரில் இன்று பட்டா வழங்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், “நீர்நிலை அல்லது கால்வாய் புறம்போக்கு நிலங்களில் எத்தனை முறை மனு அளித்தாலும் பட்டா வழங்க முடியாது; ஆனால் அரசு விதிகளுக்குள் உரிமை பெறுபவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்தார்.
வியாழன், 13 நவம்பர், 2025
Home
செய்திகள்
காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் 180 பேருக்கு ரூ.11.47 கோடி மதிப்பிலான பட்டா — 36 ஆண்டுகள் காத்திருந்த மக்களின் கனவு நனவானது
காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் 180 பேருக்கு ரூ.11.47 கோடி மதிப்பிலான பட்டா — 36 ஆண்டுகள் காத்திருந்த மக்களின் கனவு நனவானது
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக