ஈரோடு மாவட்டம் பவானியில் செல்லியாண்டியம்மன் சண்டியாகம் சிறப்பாக நடைபெற்றது - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வியாழன், 13 நவம்பர், 2025

ஈரோடு மாவட்டம் பவானியில் செல்லியாண்டியம்மன் சண்டியாகம் சிறப்பாக நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் பவானியில் பக்தர்களின் காக்கும் தெய்வமாக விளங்கும் அருள்மிகு செல்லியாண்டியம்மன் மாரியம்மன் திருக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் சண்டியாகம் இவ்வாண்டும் பக்தி நிறைந்த சூழலில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சுமார் 15 அடி ஆழமுள்ள யாகக் குண்டம் அமைக்கப்பட்டு, அதில் பல்வேறு வகையான திரவியப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பவித்ரப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 13 அத்தியாயங்களுக்கான 13 பூர்ணாகுதிகள் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் இறுதியாக மகாபூர்ணாகுதி நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக பட்டு வஸ்திரங்கள் யாகத்தில் போடப்பட்டு, பின்னர் யாகக் கலசத்திற்கும் தெய்வத்திற்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து அருள்மிகு செல்லியாண்டியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. யாகத்தில் பூஜிக்கப்பட்ட கலசநீர் தெய்வத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தெய்வ அருளைப் பெற்று சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad