ு
நவ பாரதத்தின் சிற்பி மற்றும் இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 136-வது பிறந்த நாள் விழா திங்கள் நகர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
திங்கள் நகர் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ஜெமினிஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வட்டார நிர்வாகிகள் வேணுகோபால் போற்றி, அஸ்வின் ராஜா, ரதீஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம் கலந்து கொண்டு, நேருவின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட காங்கிரஸ் அமைப்பு செயலாளர் சாமுவேல் சேகர் இனிப்பு வழங்கி விழாவை சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் பேரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் சகாய ஜஸ்டஸ் ஜெகன், கவுன்சிலர் பீட்டர் தாஸ், ஜெலடின் பாபு, ராபர்ட், சுஜின், கெல்வின், தங்கராஜ், ரஜுலின் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அன்னாரின் அரசியல் படைப்புகளையும் நாட்டிற்கான பங்களிப்பையும் நினைவுகூர்ந்தனர்.
வியாழன், 13 நவம்பர், 2025
Home
செய்திகள்
ஜவஹர்லால் நேரு 136-வது பிறந்த நாள்: திங்கள் நகரில் காங்கிரஸ் சார்பில் மரியாதை நிகழ்வு
ஜவஹர்லால் நேரு 136-வது பிறந்த நாள்: திங்கள் நகரில் காங்கிரஸ் சார்பில் மரியாதை நிகழ்வு
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக