மயிலாடுதுறையில் காவிரி கரையில் அமைந்துள்ள பழமையான ஸ்தலமான மயூரநாதர் கோவிலில், ஐப்பசி துலா உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாயன்மார்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவராலும் பாடல் பெற்ற தலமாக விளங்கும் இந்த கோவில், சைவ சமயத்தில் தனித்துவமான புகழ் பெற்றதாகும்.
தலபுராணத்தின் படி, அம்மன் மயிலுருவில் இறைவனை பூஜித்த புனிதத் தலம் இதுவாகும். மேலும், ஐப்பசி மாதத்தில் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் துலாக்கட்டு காவிரியில் நீராடி தங்கள் பாவச்சுமையை போக்கும் தலமாகவும் பரவலாக நம்பப்படுகிறது. இதனையடுத்து, ஒவ்வோராண்டும் இந்த மாதத்தில் கடைசி 10 நாட்கள் அனைத்து கோவில்களிலும் தீர்த்தவாரி நடைபெறும் மரபு உள்ளது.
கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சி திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது. வசந்த மண்டபத்தில் மயூரநாதர், அவையாம்பிகை சமேத எழுந்தருள, பெண்கள் சீர்வரிசை எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.
திருவாவடுதுறை
வியாழன், 13 நவம்பர், 2025
Home
ஆன்மீக தகவல்கள்
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் ஐப்பசி துலா உற்சவம் – திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் ஐப்பசி துலா உற்சவம் – திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
Tags
# ஆன்மீக தகவல்கள்
About bmstelevision
ஆன்மீக தகவல்கள்
லேபிள்கள்:
ஆன்மீக தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக