கேரளாவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த பெண் உட்பட இருவரை, பீருமேடு கலால் துறையினர் கைது செய்தனர் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

திங்கள், 17 நவம்பர், 2025

கேரளாவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த பெண் உட்பட இருவரை, பீருமேடு கலால் துறையினர் கைது செய்தனர்

கேரளாவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த பெண் உட்பட இருவரை, பீருமேடு கலால் துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 50 கிராம் உயிர்க்கொல்லி போதை மருந்தான எம்.டி.எம்.ஏ (MDMA) உட்பட போதைப்பொருட்களும், 3.75 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் இடுக்கி மாவட்ட துணை கலால் ஆணையர் பிரின்ஸ் பாபு, உதவி ஆணையர் பிரதீப் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில்,பீருமேடு கலால் அலுவலகம் மற்றும் வட்ட அலுவலகம் இணைந்து, சுற்றுலாத்தலமான வாகமண் பகுதியின் கோலாகலமேடு சாலையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த KL 85 A 6727 என்ற கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்திச் சோதனை செய்தனர். காரில் வந்த கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது ஃபவாஸ் (32) மற்றும் சிரவண்தாரா (27) ஆகிய இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் காரை சோதனை செய்தனர். அதில், 47.985 கிராம்எம்.டி.எம்.ஏ, 5 கிராம் உலர் கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
மேலும் இவர்கள் வாகமண் பகுதியில் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் நடத்திய சோதனையில், கூடுதலாக 2.065 கிராம் எம்.டி.எம்.ஏ, 2.970 கிராம் ஹாஷிஷ் ஆயில் மற்றும் ₹3,75,000 (மூன்று லட்சத்து எழுபத்தைந்தாயிரம்) ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.போலீசார் நடத்தி விசாரணையில், கைது செய்யப்பட்ட சிரவண்தாரா, இந்த மாதம் (நவம்பர்) 11-ஆம் தேதி ஆலப்புழா அரூரில் 430 கிராம் எம்.டி.எம்.ஏ.யுடன் கைது செய்யப்பட்ட ஸ்ரீமோன் என்பவரின் மனைவி என்பதும், முகமது ஃபவாஸ் நண்பர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த இருவரும், கேரளத்தில் மாநிலம் முழுவதும் போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஒரு பெரிய கும்பலின் முக்கியக் கண்ணிகள் என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையில் கலால் துறை ஆய்வாளர்கள் நிதின் குஞ்சுமோன், அன்சார், ஜோபி பி சாக்கோ, ராஜ்குமார், ராதாகிருஷ்ணன், மணிகண்டன், ஜெயராஜ் மற்றும் பெண் அதிகாரி சிந்து கே. தங்கப்பன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad