குப்பை அகற்றம், சாக்கடை சுத்தம், தெருவிளக்கு: பல்வேறு குறைகளை சொல்லி உறுப்பினர்கள் விவாதம் தீவிரம் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

புதன், 19 நவம்பர், 2025

குப்பை அகற்றம், சாக்கடை சுத்தம், தெருவிளக்கு: பல்வேறு குறைகளை சொல்லி உறுப்பினர்கள் விவாதம் தீவிரம்

சீர்காழி நகராட்சி அவசரக் கூட்டம் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.ஆணையர் மஞ்சுளா, துணைத் தலைவர் சுப்பராயன். நகரமைப்பு ஆய்வாளர் மரகதம், பொறியாளர் கிருபாகரன்,வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார்,எழுத்தர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.மன்ற தீர்மான பொருட்களை எழுத்தர் ராஜகணேஷ் வாசித்தார்.கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது,ரமாமணி (அதிமுக): மாதம் மாதம் நகர்மன்ற கூட்டம் நடத்தப்பட வேண்டும்.பாகுபாடு இல்லாமல் அனைத்து வார்டுகளிலும் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனது வார்டில் அடிப்பம்பு, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.வேல்முருகன் (பாமக):கடந்த நகர மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எப்படி தற்போதைய மன்ற கூட்ட பொருளில் மீண்டும் இடம்பெற்றுள்ளது.மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திருத்தம் செய்வதற்கு யாருக்கு அதிகாரம் உள்ளது.சீர்காழி நகராட்சிக்கு ரூ. 47 லட்சத்தில் வாங்கப்பட்ட கழிவுநீர் டேங்கர் லாரி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக வரும் முன்னரே தற்போது வாகனம்  விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த லாரி எங்கு உள்ளது என அதிகாரிகளுக்கு தெரியாத நிலை உள்ளது. அந்த வாகனத்திற்கு இன்சூரன்ஸ் கட்டப்படாமல் உள்ள நிலையில் தற்போதைய டேங்கர் லாரி  விபத்திற்கான இழப்பீட்டை அதிகாரிகள் ஏற்று செய்வார்களா அல்லது நகராட்சி நிர்வாகம் ஏற்று செலவிடுமா என்றார். எனது வார்டில் பூங்கா அமைப்பதற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 9லட்சம் நிதி பெற்றுத்தந்தும் கடந்த மூன்று ஆண்டுகளாக பணி தொடங்கப்படவில்லை.துக்க நிகழ்வுக்கு தண்ணீர் எடுப்பதற்கு அடிப்பம்பு இல்லாமல் மக்கள் பெரிதும் சிரமம் அடைகின்றன.
ராஜசேகரன் (தேமுதிக) : எனது வார்டு குடிசைகள் அதிகம் உள்ள பகுதி. எனது வார்டில் முறையாக குப்பைகளை அகற்றி தூய்மை பணி செய்ய வேண்டும்.சாலை குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.ஜெயந்தி பாபு (திமுக.) தினசரி மேற்கொள்ள வேண்டிய பணிகளான குப்பைகள் அகற்றுவது சாக்கடைகளை தூய்மை செய்வது ஆகியவை எனது வார்டில்  மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அகற்றும் நிலை உள்ளது.இதனால்  சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தாமரைக் குளம் சீரமைத்ததற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி. தாமரைக் குளத்தை ஊழியரை நியமித்து முறையாக பராமரிக்க வேண்டும்.ரம்யா (திமுக) சீர்காழி நகராட்சியில் கமிஷன் பெறக்கூடிய வேலைகள் மட்டுமே துரிதமாக  நடைபெறுகிறது. மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு ஏற்படுத்தித்தரவில்லை. வார்டு சிறப்பு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.எடுக்காத நடவடிக்கைக்கு மக்களிடமிருந்து ஏன் மனுக்களை பெறுகிறீர்கள்.எனது வார்டில் முன்னுரிமை அடிப்படையில் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும்.ரேணுகாதேவி (திமுக) திட்டை ரோடு முனீஸ்வரன் கோயில் எதிரில் உள்ள முக்கிய வடிகால் பாலம் மிக ஆபத்தான நிலையில் சேதம் அடைந்துள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து உள்வாங்கும் நிலையில் உள்ளது.இந்தப் பாலம் துண்டிக்கப்பட்டால் 4 கிராம மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் உடனடியாக நிதி ஒதுக்கி பாலத்தை சீரமைக்க வேண்டும்.கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) எனது வார்டில் சாலை வசதி மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் அடிபம்பு அமைத்து தரவேண்டும்.பாலமுருகன் (அதிமுக). எனது வார்டில் மற்ற 8 வார்டுகளிலிருந்து வரும்  கழிவுநீர் தேங்கி  சுகாதார சீர்கேடு பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.இதனை சரி செய்திட உடனடி நடவடிக்கை எடுக்க விட்டால் எனது வார்டு மக்களை திரட்டி நகராட்சி முன்பு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.ராஜேஷ் (அதிமுக).  சீர்காழி நகராட்சியில் சாலையோரம் வியாபாரம் செய்யும் கடைகள் மற்றும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் டென்டர் மன்ற பொருள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 4.85 லட்சம் டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த தொகையை விட 3.60 லட்சம் டெண்டர் வைக்கப்பட்டுள்ளது .இது நகராட்சிக்கு வருவாயா? வரி இழப்பா என்பதை தெரியப்படுத்த வேண்டும்.தலைவர்:சீர்காழி நகராட்சியில் குப்பை அள்ளும் தனியார் ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த  புகாரை அடுத்து நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் உத்தரவின் பேரில் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் நிதி ஆதாரத்தின் அடிப்படையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பாகுபாடு இல்லாமல்  நடவடிக்கை எடுக்கப்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad