சீர்காழி கழுமலையாறு பாலம் ஆபத்துநிலை – புதிய பாலம் கட்ட நடவடிக்கை விரைவில் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

புதன், 19 நவம்பர், 2025

சீர்காழி கழுமலையாறு பாலம் ஆபத்துநிலை – புதிய பாலம் கட்ட நடவடிக்கை விரைவில்

சீர்காழி நகராட்சிக்குட்பட்ட திட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள கழுமலையாறு வடிகால் பாலம் கடும் சேதமடைந்து இடிந்துவிடும் நிலையில் உள்ளது. பாலத்தின் நிலைமை காரணமாக அப்பகுதியைச் சார்ந்த நான்கு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த அவசர நிலையை நகர்மன்றத் தலைவர் துர்கா ராஜேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர் ரேணுகாதேவி ஆகியோர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்த உடனே அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ-க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் ஆகியோரும் அப்பகுதிக்கு நேரில் சென்று பாலத்தின் சேதத்தை ஆய்வு செய்தனர். பின்னர், பாலத்தின் ஆபத்தான நிலையை கருத்தில் கொண்டு, புதிய பாலம் அமைப்பது தொடர்பான கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், தேவையான நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் புதிய பாலம் கட்டப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad