செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திலுள்ள கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி சாலையில் வேகத்தடைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் இதுவரை வேகத்தடைகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் சென்று விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவியது. இதனால் உள்ளூர் பொதுமக்கள் பலமுறை வேகத்தடைகள் அமைக்கக் கோரி கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி எட்டியப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆலோசித்து, சாலையில் டேபிள் டாப் வகை வேகத்தடைகள் அமைப்பதற்கு முடிவு செய்தனர். அதன் அடிப்படையில், கானத்தூர் ஊராட்சி பிலால் நகர் பகுதிகளில் வேகத்தடை அமைக்கும் பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
வேகத்தடை அமைப்பு பணி தொடங்கியதையடுத்து, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் நிம்மதி அடைந்தனர். இது போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தி, விபத்துகளைத் தவிர்க்க உதவும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதன், 19 நவம்பர், 2025
கானத்தூர் பிலால் நகர் சாலையில் வேகத்தடை அமைக்கும் பணி தொடக்கம்; பொதுமக்கள் நிம்மதி
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக