கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, வருங்காலத்தில் இந்த நகரங்களுக்கு மெட்ரோ ரெயிலை கொண்டு வருவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், மதுரை ‘கோயில் நகர்’ என்றும், கோவை ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ என்றும் அழைக்கப்படுகின்றன என்பதை குறிப்பிட்ட அவர், இவ்விரு நகரங்களுக்கும் “NO METRO” என சொல்வது ஒன்றிய பாஜக அரசின் பாகுபாடான அணுகுமுறை என தெரிவித்துள்ளார்.
அரசு தீர்மானங்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்; ஆனால் தமிழ்நாட்டில் பாஜக பலம் குறைவாக இருப்பதால் திட்டங்களை மறுப்பது பழிவாங்கும் அரசியல் என்றும் அவர் குற்றம் சாட்டினார். பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களுக்கும் கூட மெட்ரோ ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது, ஆனால் தமிழ்நாட்டை புறக்கணிப்பது கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானது என்றும் கூறினார்.
சென்னையில் மெட்ரோ பணிகளை தாமதப்படுத்த முயன்றாலும், தமிழக அரசு அவற்றைச் சமாளித்து முன்னேற்றியதாகவும், அதே போன்று கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரெயில் வசதியை உருவாக்குவது தமிழக அரசின் உறுதியான இலக்கு என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு குறித்து அரசியல் வட்டாரங்களிலும், கோவை–மதுரை மக்களிடையிலும் கடும் அதிருப்தி நிலவுகிறது.
புதன், 19 நவம்பர், 2025
Home
செய்திகள்
கோவை–மதுரை மெட்ரோ நிராகரிப்பு: தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது – ஸ்டாலின்
கோவை–மதுரை மெட்ரோ நிராகரிப்பு: தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது – ஸ்டாலின்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக