ராணிப்பேட்டை:
முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி உதவியாளர் சங்கம் சார்பில், கைபேசி டார்ச் லைட் ஏற்றி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பாரதி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமலா வரவேற்புரை வழங்கினார்.
மாவட்ட செயலாளர் ரேவதி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். அமுதவல்லி சிறப்புரை ஆற்றினார்.
முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி வாழ்த்துரை வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசுபவர்கள், “தமிழ்நாட்டில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்க முக்கிய பங்கு வகிக்கும் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களின் வாழ்நாளை நாட்டின் எதிர்காலத்திற்காக அர்ப்பணித்து வருகின்றனர். இருப்பினும் அவர்களின் வாழ்வாதாரம் கடினமான நிலையில் உள்ளது. துறை சாரா பணிகளுக்கும் ஈடுபடுத்தப்படுவது அநியாயம்” என தெரிவித்தனர்.
அத்துடன், 2021 தேர்தல் வாக்குறுதியின் படி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முடிவில் மாவட்ட பொருளாளர் சரளா நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சனி, 8 நவம்பர், 2025
ராணிப்பேட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் கைபேசி டார்ச் லைட் ஏற்றி ஆர்ப்பாட்டம்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக