கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்தின் சார்பில், பர்கூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றிய அதிமுக கழகம் ஏற்பாட்டில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கழக துணைப் பொது செயலாளர் மற்றும் வேப்பனஅள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி, சேலம் புறநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ.,
“இன்றைய சூழலில் புதிய கட்சிகள் உருவாகி மக்களிடையே மாயப்பிம்பம் உருவாக்குகின்றன. மக்கள் தொடர்பின்றி, சினிமா பிரபலத்தைக் கொண்டு தங்களை பெரியதாக நினைத்து தேர்தலில் போட்டியிட முனைகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,” என்றார்.
அவரும் மேலும், “திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை என ஆண்டுக்கு ₹12,000 வழங்கினாலும், கூடுதல் வரிகளால் ஆண்டுக்கு ₹40,000 வரை மக்கள் மீது சுமையாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பெண்கள் உண்மையான பாதிப்பை உணர வேண்டும்,” என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட எம்ஜிஆர் இணை செயலாளர் ரவிசந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.பி.எம். சதீஷ்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் ஜமுனா கிருஷ்ணன், அம்மா பேரவை செயலாளர் மாதையன், இலக்கிய அணி செயலாளர் கார்த்திகேயன், விவசாய அணி செயலாளர் மோகன், தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் ராஜா அண்ணாமலை, இணை செயலாளர்கள் மணிகண்டன், முனிரத்தினம் குணசேகரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உள்ளூர் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
சனி, 8 நவம்பர், 2025
காவேரிப்பட்டணம் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக