மயிலாடுதுறையில் ரயில்வே சேவைகள் தொடர்பாக உண்ணாவிரதம் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

சனி, 8 நவம்பர், 2025

மயிலாடுதுறையில் ரயில்வே சேவைகள் தொடர்பாக உண்ணாவிரதம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு எதிரே, பல்வேறு ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்துக்கு இயற்கை விவசாயி இராமலிங்கம் தலைமை வகித்தார். போராட்டத்தில், மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய மயிலாடுதுறை–காரைக்குடி இடையிலான 3 ரயில்களை மீண்டும் இயக்குதல், புதிதாக அமைக்கப்பட்ட காரைக்கால்–பேரளம் ரயில்பாதையில் பயணிகள் சேவையை உடனடியாக துவங்குதல், காரைக்குடி–எழும்பூர் டே எக்ஸ்பிரஸ் ரயிலை மயிலாடுதுறை வழியாக இயக்குதல், மேலும் டிக்கெட் வாங்கும்போது G.Pay பரிவர்த்தனையை கட்டாயப்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் தங்க. அய்யாசாமி, தமிழ் தேசிய இயக்க மண்டல அமைப்பாளர் பேராசிரியர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் அடையாள உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad