தாய்-சேய் நலனை மேம்படுத்தும் பயிற்சி – சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வெள்ளி, 14 நவம்பர், 2025

தாய்-சேய் நலனை மேம்படுத்தும் பயிற்சி – சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தாய் மற்றும் சேய் நலனை உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை, சிங்கப்பூர் சிங் ஹெல்த் மற்றும் சிங்கப்பூர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை தொடர்பான பயிலரங்கம் நிறைவு விழா இன்று நடைபெற்றது. சென்னை எழும்பூர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பயிற்சி மையத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
பயிற்சி பெற்ற முதன்மைப் பயிற்சியாளர்கள், சிங்கப்பூரிலிருந்து வருகை புரிந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய பயிற்சியாளர்களுக்கு அமைச்சர் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கினார். தாய் மற்றும் சேய் உயிர் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இத்தகைய பயிற்சிகள் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் முனைவர் பா. செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் திரு. அருண் தம்புராஜ், பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் திரு. சோமசுந்தரம், சிங்கப்பூர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சிஇஓ கொரினா சென்ட் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், எழும்பூர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனை இயக்குனர் திரு. சுமதி, இணை இயக்குனர் திரு. நிர்மல்சன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவ நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad