சென்னை: தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் பொங்கல் 2026 பேட்டிசேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம் மற்றும் கைத்தறி, துணிநூல் துறை சார்ந்த பிற முக்கிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி அவர்கள் தலைமையேற்றார். துறை சார்ந்த திட்டங்களை விரைவாகவும், சிறப்பாகவும் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் நடைபெறும் பணிகள் குறித்து விரிவான ஆய்வு இக்கூட்டத்தில் நடைபெற்றது.
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அரசு செயலாளர் திருமதி வே. அமுதவல்லி கூட்டத்தில் விளக்கமளித்தார். துறையின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான முன்னேற்ற நிலை ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, பொங்கலுக்கு முன் பேட்டிசேலைகள் தரத்துடன் தயாராகி, மக்களிடம் சென்றடையும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் திருமதி கவிதா ராமு, கைத்தறித்துறை இயக்குநர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்ட துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொழில் நுட்ப மேம்பாடு, ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளும் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
வெள்ளி, 14 நவம்பர், 2025
Home
செய்திகள்
பொங்கல் 2026 – பேட்டிசேலை / பள்ளி சீருடை திட்ட முன்னேற்றம் குறித்து தலைமைச்செயலகத்தில் ஆலோசனை
பொங்கல் 2026 – பேட்டிசேலை / பள்ளி சீருடை திட்ட முன்னேற்றம் குறித்து தலைமைச்செயலகத்தில் ஆலோசனை
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக