தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. மூத்த அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி, மா. சுப்பிரமணியன் தலைமையில், தேசிய, மாநில மற்றும் சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டங்கள் பாதுகாப்பு நிலை அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன — குறைந்த ஆபத்து (200 பேருக்கு ஒரு காவலர்), மிதமான ஆபத்து (100 பேருக்கு ஒரு காவலர்), அதிக ஆபத்து (50 பேருக்கு ஒரு காவலர்).
5000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்வதாக இருந்தால் ₹1 லட்சம் டெபாசிட், 10,000–20,000 பேர் வரை ₹3 லட்சம், 20,000–50,000 பேர் வரை ₹8 லட்சம், 50,000 பேருக்கு மேல் ₹20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும். அனுமதி மனு அங்கீகரிக்கப்பட்ட இடத்திற்கு 10–15 நாட்களுக்குள், அங்கீகரிக்கப்படாத இடத்திற்கு 21–30 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும்.
அமைப்பாளர்கள் கூட்டத்தின் ஒழுங்கு, பாதுகாப்பு, சொத்து சேத இழப்பீடு, அவசர சேவை வழிச்சலுகை, வாகன நிறுத்தம் போன்றவற்றுக்கு எழுத்துப்பூர்வ பொறுப்பேற்க வேண்டும். கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.
ரோடு ஷோக்கள் நடத்தும்போது வழித்தடம், உரை இடம், நேரம், கூட்டம் ஆகிய விவரங்களுடன் எழுத்துப்பூர்வ அனுமதி அவசியம். சிறப்பு விருந்தினர் பேசும் இடத்திலிருந்து 500 அடி தூரம் வரை தடுப்பு அமைக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.
வியாழன், 6 நவம்பர், 2025
Home
செய்திகள்
தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக