வைகோ கடும் விமர்சனம்: “கரூர் கொடுந்துயருக்கு காரணமான விஜய் பொறுப்பற்று நடந்து கொள்கிறார்” - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

வைகோ கடும் விமர்சனம்: “கரூர் கொடுந்துயருக்கு காரணமான விஜய் பொறுப்பற்று நடந்து கொள்கிறார்”

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.வெ.க. தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். த.வெ.க. பொதுக்குழுவில் விஜய் ஆற்றிய உரையை சுட்டிக்காட்டி வெளியிட்ட அறிக்கையில் வைகோ தெரிவித்ததாவது:“பொது வாழ்வில் ஆத்திச்சூடியே அறியாதவர் விஜய். கரூர் கொடுந்துயருக்கு முழுக்காரணமான விஜய், பொறுப்பற்று திசைதிருப்புகிறார். நடந்த சம்பவத்திற்காக அவர் துளியளவும் வருத்தப்படவில்லை; குற்ற உணர்ச்சியும் இல்லை. காகிதக் கப்பலில் கடல் தாண்ட முயல்கிறார்; ஆகாயத்தில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிவிடும்.தி.மு.க.வை சற்றும் மான வெட்கம் இன்றி எள்ளி நகையாட முயல்கிறார். முதலமைச்சர் மீது வெறுப்பும் கசப்பும் கொட்டி தீர்த்திருக்கிறார் விஜய். அவர் நடத்தை அனுதாபத்திற்கும் பரிதாபத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது. விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்” என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad