புதுச்சேரி அருகே உள்ள திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தார்களை தொடர்ந்து திருடி வந்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
புகார்களின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் ராஜகுமார் உத்தரவின்படி, உதவி காவல் ஆய்வாளர் பிரியா, பார்த்தசாரதி மற்றும் காவலர் துரைகண்ணன் ஆகியோர் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை அருகே இருசக்கர வாகனத்தில் வாழைத்தார்களுடன் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில், அவர் கொடாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் வெங்கடேசன் (38) என அடையாளம் காணப்பட்டார்.
விசாரணையில், கடந்த ஒன்றரை ஆண்டாக வாரத்திற்கு இருமுறை விவசாய நிலங்களில் இரவு நேரத்தில் சென்று வாழைத்தார்களை அறுத்து, புதுச்சேரி நேரு வீதி மார்க்கெட்டில் விற்று வந்தது தெரியவந்தது. போலீசார் நான்கு வாழைத்தார்களை, இருசக்கர வாகனத்தையும், மொபைல் போனையும் பறிமுதல் செய்து, வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் விவசாயிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதையடுத்து, போலீசார் விவசாய நிலங்களில் சிசிடிவி கேமரா அமைக்குமாறு பரிந்துரைத்துள்ளனர். இது திருட்டு தடுப்பு, காட்டு மிருக நுழைவு கண்காணிப்பு, நீர்ப்பாசன வசதி பாதுகாப்பு, மற்றும் 24 மணி நேர கண்காணிப்புக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
வியாழன், 6 நவம்பர், 2025
Home
செய்திகள்
புதுச்சேரி: வாழைத்தார்களை திருடி வந்த பெயிண்டர் கைது – சிசிடிவி அமைக்க போலீசார் பரிந்துரை
புதுச்சேரி: வாழைத்தார்களை திருடி வந்த பெயிண்டர் கைது – சிசிடிவி அமைக்க போலீசார் பரிந்துரை
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக