மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நக்கம்பாடி ஸ்ரீ கண்டபுரம் கருணை மஹான் தீர்க்கதரசி ஹஜ்ரத் செய்யதினா பக்கீர் முஹம்மது ஒலியுல்லாஹ் தர்ஹா அமைந்துள்ளது இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டு கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கந்தூரிவிழா தொடங்கியது.அதனை தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் நேற்று விடியற்காலை 2.30 மணிக்கு சந்தனம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு
ஹஜ்ரத் செய்யதினா பக்கீர் முஹம்மது ஒலியுல்லாஹ்
தர்ஹாவில் சந்தனம் பூசும் வைபவம் சிறப்புத் துவா ஓதி வழிபாடு நடைபெற்றது.இதில் தஞ்சை, நாகை,திருவாரூர்,கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சீடர்கள்,பங்கேற்றனர்.இந்த விழாவில் மத சார்பற்று அனைத்து மதத்தினரும் திரளாக கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாலையூர் காவல் நிலைய ஆய்வாளர் கரிகால சோழன் தலைமையில் போலீஸார் 10க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
செவ்வாய், 4 நவம்பர், 2025
Home
செய்திகள்
நக்கம்பாடி கருணை மஹான் தீர்க்கதரசி ஹஜ்ரத் செய்யதினா பக்கீர் முஹம்மது ஒலியுல்லாஹ் தர்ஹா சந்தனக்கூடு கந்தூரி விழா
நக்கம்பாடி கருணை மஹான் தீர்க்கதரசி ஹஜ்ரத் செய்யதினா பக்கீர் முஹம்மது ஒலியுல்லாஹ் தர்ஹா சந்தனக்கூடு கந்தூரி விழா
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக